இந்தியாவில் உள்ள அனைத்து பொறுப்புகளிலும் சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அப்பகுதிகளில் உள்ள மக்களும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வருகிறார்கள். அதுபோலதான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் கீரனூர் போஸ்ட் ஆபீசில் அப்பகுதியில் உள்ள கீரனூர், கீரனூர் மேல் கட்டி, தொப்பம்பட்டி, கவுண்டன் வலசு உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் நூறு ரூபா முதல் 3000 வரை இந்த கீரனூர் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் போட்டு வந்தனர்.
இந்த பணத்தை போஸ்ட் ஆபீஸில் கலெக்ஷன் பிரிவில் வேலை பார்க்கும் பிரேமாவிடம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டி அருகே உள்ள காட்டு பகுதியில் பிரேமா விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.
இந்த விஷயம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியவே உடனே கீரனூர் போலீஸ்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் பிரேமாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்
.
இந்த நிலையில் தான் பிரேமா மூலம் போஸ்ட் ஆபீஸ் சில் பணம் போட்டு வந்தவர்கள் திடீரென கீரனூரில் உள்ள போஸ்ட் ஆபீஸ் க்கு post ஆபீசுக்கு சென்று சென்று தங்கள் கட்டிய பணம் சரியாக இருக்கிறதா என்று பாஸ்புக் கை கொண்டு போய் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இது பற்றி அப்பகுதியில் உள்ள சிலரிடம் கேட்டபோது.... கீரனூர் போஸ்ட் ஆபீஸ் சில் கலெக்ஷன் பிரிவில் வேலைப்பார்த்து வந்த பிரேமா தினசரி சிறுசேமிப்பில் சேர்ந்த மக்களிடம் வீட்டுக்கும், தோட்டம் காடுகளில் வசிக்கும் விவசாயமக்களிடமும்
நேரடியாக சென்று சிறு சேமிப்பு பணத்தை வாங்கி கொண்டு பாஸ்புக் கில் வரவு வைத்து விட்டு ஆபீஸ் போய் உங்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பிரேமா கூறி செல்வார். அதை நம்பி மக்களும் பணம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பிரேமா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நாங்கள் போஸ்ட் ஆபீஸ் உள்ள எங்கள் கணக்கை சரிபார்த்த போது நாங்கள் கொடுத்த பணத்திற்கு அங்குள்ள கணக்குக்கும் ஆயிரக்கணக்கில் விடுதலை ஆகி இருந்தது. அதாவது ஒவ்வொருத்தருக்கும் 10,000 முதல் 60 வரை பணம் கட்டியும் கூட அந்த பணத்தை முறையாக இந்த பிரேமா போஸ்ட் ஆபீசில் கொடுத்து வரவு வைக்காமலேயே மோசடி செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன்பேரில் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்டவர்கள் கட்டிய சிறு சேமிப்பு பணத்தில் ஒரு கோடி வரை மோசடி செய்து இருக்கிறார் என்று தெரிகிறது. இதுபற்றி போஸ்ட் ஆபீசில் கேட்டால் கணக்கில் வரவு இருந்தால் தான் பணம் கிடைக்குமே தவிர பாஸ்புக் கில் உள்ள பணம் எல்லாம் கிடைக்காது. உங்களிடம் பணம் வாங்கி கொண்டு இங்கு வரவு வைக்கவில்லை. அப்படி இருக்கும் போது அதை எப்படி போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறி கைவிரித்து வருகிறார்கள். அதோடு போலீஸ் ஸ்டேஷனில் கேட்டாலும் சரியான பதில் இல்லை.
இதனால் சிறு சேமிப்பு பணம் போட்ட அப்பாவி பொதுமக்களாகிய எங்களை போல் பலர் கஷ்டப்பட்டு கட்டிய பணம் பணத்தை பறிகொடுத்து விட்டு தவித்து வருகிறோம் என்று வருத்தத்துடன் கூறினார். இச் சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.