Skip to main content

சுர்ஜித்தின் மரணத்தில் இருந்தாவது பாடம் படிக்குமா தமிழ்நாடு அரசு? 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு பதிலாக அதை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக (Artificial Ground water Recharge Wells) மாற்றி அமைக்க வேண்டும் என பூவுலகின் சுந்தர்ராஜ் வலியுறுத்தல். 
 

அவர் பேசியதாவது, உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என சொல்கிறது உலக வங்கியின் ஆய்வு, உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படும் நிலத்தடி நீரில் நான்கில் ஒரு பங்கை இந்தியா மட்டும் பயன்படுத்துவதாக, அதாவது ஆண்டிற்கு சுமார் 230 Km3 நிலத்தடி நீரை உறுஞ்சிகிறது. இந்தியாவின் குடிதண்ணீர் தேவைகளில் 85% மும், விவசாயத் தேவைகளில் 65% மும் நிலத்தடி நீரால் பூர்த்தி செய்யப்படுகிறது. (Source: National Institute of Hydrology Report). (இந்த அவலத்திற்கு முக்கிய காரணம் பசுமை புரட்சி திட்டத்திற்கு பிறகு நவீன விவசாய முறைகளிலும் நீர் மேலாண்மையிலும் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் தான்) இதில் நாம் கவனிக்க வேண்டியது.

POOVULAGIN NANBARGAL SUNDARRAJAN TRICHY CHILD SURJITH


இந்தியாவிலே அதிகம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. நாம் தமிழகத்தின் 77% நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் உறுஞ்சுகிறோம்.சதுர கிலோ மீட்டர்க்கு அதிகபட்சம் 50 பம்ப்செட் கள் இருக்கலாம் ஆனால் இங்கு 175 முதல் 200 பம்ப்செட்டுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் Annual Rainwater recharge rate = 19.81 Km3 yr-1 ஆனால் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு 21.4 Km3 yr-1.அதாவது நிலத்தடி நீர் நிரம்புவதை காட்டிலும் 8% அதிகம் நாம் உறுஞ்சிக்கொண்டு இருக்கிறோம். தர்மபுரி, அரியலூர், சேலம், வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கடுமையாக பாதிக்கபட்டிருகின்றன. 


இந்த நிலைக்கு காரணம் நாம் நிலத்தடி நீர் recharge செய்வது பற்றிய அக்கறை இல்லாமல் ஆழ்துளை கிணறு போட்டு அதை நம் தேவைகளுக்காக உறியத்தொடங்கியதும் நீர் மேலாண்மையில் செய்த தவறுகளும் தான். இதன் விளைவு இன்று நமக்கு கிடைக்கும் மழையில் 80% க்கும் மேலான மழை நீர் நிலத்தடியை சென்று சேராமல் கடலில் கலந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் (Complete desertification of ground water) அபாயம் இருப்பதாக அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.  

இந்த நிலைக்கு செல்லாமல் தவிர்பதற்கு Artificial Ground Water Recharge முறையை நடைமுறை படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். புதிதாக ஒரு Artificial Ground Water Recharge well ஐ அமைப்பதற்கு அதிக செலவாகும். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்டிருக்கும் “Failed Borewell” களை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய்கள் மட்டுமே ஆகும். எனவே தமிழ்நாட்டிலுள்ள கைவிடப்பட்ட Failed Borewell களை Artificial Ground Water Recharge wells ஆக அரசாங்கம் மாற்ற கோரி நீண்டகாலமாகவே பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைத்து வருகிறோம். 

POOVULAGIN NANBARGAL SUNDARRAJAN TRICHY CHILD SURJITH



இந்நிலையில் சுர்ஜித் மறைவிற்கு பிறகு 29.10.2019 அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்ட பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், மற்றும் நீர் உறுஞ்சி கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்த்தில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது.. 
 

அரசின் இந்த நடவடிக்கையை பூவுலகின் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம், அதே சமயம் தனி நபர்களால் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற அரசு நில உரிமையாளருக்கு மானியம் தந்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை நடைமுறை படுத்துவதின் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான தீர்வை இந்த பிரச்சனையில் இருந்தே தீர்க்க முடியும்.
 

ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு பதிலாக அதை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக (Artificial Groundwater Recharge Wells)மாற்றி அமைப்பது தான் இன்னொறு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுவதையும், இன்னொரு பிரிட்டோ 650 அடி ஆழ கிணற்றை தோண்டி கைவிடுவதையும் தடுக்கும்... சுர்ஜித்தின் மரணத்தில் இருந்தாவது பாடம் படிக்குமா தமிழ்நாடு அரசு? இவ்வாறு பேசினார்.



 

சார்ந்த செய்திகள்