தமிழகத்தில் முட்டையில் ஊழல் நடைபெறுள்ளதாக நேற்று குற்றச்சாட்டை முன்வைத்தீர்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷணன்
அது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு நான் வைத்த குற்றச்சாட்டு அல்ல. முட்டையில் ஊழல் 5 ஆயிரம் கோடி என்ற குற்றச்சாட்டை நீங்கள் முன்வைத்தீர்கள். அதற்கு என் பதில் தமிழக மக்கள் மொட்டை போடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவே முட்டை ஊழல் எல்லாம் பெரியதில்லை இதையெல்லாம் தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்று சொன்னேன்.
அமித்ஷா தமிழக வருகையின்போது தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது என்ற கூறிய கருத்துக்கு ஆ.ராசா மத்திய உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது என கேள்வியெழுப்பியுள்ளார் என்ற கேள்விக்கு
''குற்றம் உள்ள மனசு குறுகுறுக்கும்'' ஆ.ராசா மீது இருந்த வழக்குகள் என்னென்னவென்று அனைவருக்கும் தெரியும். இப்போது வேண்டுமானால் அவர் இப்படி இருக்கலாம் ஆனால் வருங்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனவே தேசிய தலைவர் அமித்ஷா சொன்ன கருத்துக்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பாமக, தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை என கூறியுள்ளதே என்ற கேள்விக்கு
கூட்டணி குறித்த நிலவரங்கள் தேர்தல் நெருங்கும்போது தெரியும் எனக்கூறி '' எத்தை தின்றால் பித்தம் தணியும் என்ற பழமொழியை சுட்டிக்காட்டினார்.