பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல் ரூபாய் 2,500 திட்டம் அமல்படுத்தப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் துவங்கும்" என தெரிவித்தார்.
இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கி வந்த நிலையில் ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.