Published on 16/01/2020 | Edited on 16/01/2020
உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு, நெற்றியில் மஞ்சள், கும்குமம் இடப்பட்டு, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கால்நடைகளுக்கு உணவளித்து, அதனை வணங்கி மாட்டுப்பொங்கலை சிறப்பான முறையில் உரிமையாளர்கள் கொண்டாடினர்.