பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் நல்ல லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டுவந்தது. இந்நிறுவனங்களில் 1,800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்று வந்தது. இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்து உள்ளார்கள். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய வலியுறுத்தி இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனைகளை சரிசெய்து நிலுவை சம்பளத்தை வழங்கவும், நிறுவனத்தை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் இல்லாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகிறார்கள்.
அரசின் இந்த போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் (10. 09.2020) முதல் பிரச்சனைகளை தீர்க்கும் வரை சட்டமன்றம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இரண்டாவது நாள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தையும், மூன்றாவது நாள் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டத்தையும், நான்காவது நாள் தட்டேந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தையும், ஐந்தாவது நாள் சங்கு ஊதி, மணி அடித்து காத்திருப்பு போராட்டத்தையும், ஆறாவது நாளான நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் ஏழாவது நாளான இன்று சட்டமன்றம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், விவசாய சங்க மாநில தலைவர் து.கீதநாதன், ஏ.ஐ.டி.யு.சி மாநில செயல் தலைவர் V. S.அபிஷேகம், மாநில தலைவர் I.தினேஷ் பொன்னையா, மாநில பொதுச்செயலாளர் K.சேது செல்வம், மாநில துணைத்தலைவர் ப.முருகன், விவசாய சங்க செயலாளர் பெருமாள், விவசாய சங்க பொருளாளர் v.கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த தொடர் போராட்டங்கள் குறித்து ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், “பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் நல்ல லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டுவந்தது. இந்நிறுவனங்களில் 1,800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்தார்கள். இந்நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் முறைகேடு, நிர்வாக திறமையின்மை காரணமாக நாளடைவில் நலிவுற்றுவந்தது. இதனை ஆட்சியாளர்கள் சரிசெய்யாமல் இந்நிறுவனத்தை முடக்கி, செயல்படாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இதனால் இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள்.
இந்த பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தி இங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த பிரச்சனைகளை சரிசெய்து நிலுவை சம்பளத்தை வழங்கவும், நிறுவனத்தை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் இல்லாமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகிறார்கள். அரசின் இந்த போக்கை கண்டித்தும், இந்நிறுவனங்களை திறந்து நடத்த வலியுறுத்தியும், நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் 10.09.2020 முதல் பிரச்சனைகளை தீர்க்கும் வரை சட்டமன்றம் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சம்பளம் கேட்டு போராடிய பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளர்களை ஏழாவது நாளான இன்று (16-09-2020) காங்கிரஸ் அரசு காவல்துறையை வைத்து கைது செய்து கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ள நிலையில் அங்கும் போராட்டம் தொடர்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் தொடரும்" என்றார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சண்டே மார்க்கெட் சங்கம், கட்டிடத் தொழிலாளர் சங்கம், சுமைதூக்குவோர் சங்கம், ஆட்டோ சங்கம், உழவர்கரை நகராட்சி சங்கம், கைத்தறி சங்கம், KVK சங்கம், பாண்டெக்ஸ் சங்கம், பேருந்து சங்கம், விற்பனைக்குழு சங்கம், பாண்லே முகவர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கண்டன உரையாற்றினர்.