’’தமிழக அரசியலில் தலைமுறை மாற்றம்’’
-நூல் வெளியீட்டு விழா(படங்கள்)
"தமிழக அரசியலில் தலைமுறை மாற்றம்" எனும் தலைப்பில் வழக்கறிஞர்
கவி சூர்யா எழுதியுள்ள நூலின் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கில் நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஐசக் லிவிங்ஸ்டன் வெளியிட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் பெற்று கொண்டார்.
புத்தகத்தை பற்றிய சுருக்கவுரையின் போது பேசிய சத்தியம் தொலைகாட்சியின் நிர்வாக இயக்குனர் ஐசக் லிவிங்ஸ்டன், திராணி உள்ளவரை சமுதாயத்தின் அவலங்களை துடைத்தெறிய சலிக்காது போராட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மதத்தை வைத்து மக்களை பிரிக்க சில சக்திகள் ஊடுறுவியுள்ளதை நினைத்து வருத்தம் தெரிவித்த அவர், சவாலான இந்த காலகட்டத்தில் இந்த புத்தகம் அவசியமானது என பெருமிதம் தெரிவித்தார்.
புத்தக வெளியீட்டிற்கு பிறகு அனைவருக்கும் வழக்கறிஞர் கவி சூர்யா நன்றி தெரிவித்தார்.
- அருண்பாண்டியன்