Skip to main content

குமரியில் கைகலப்பை நிறுத்திய கைகுலுக்கல்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கன்னியாகுமாி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணை ஆதாித்து இன்று இரவு தோவளை, வடசோி, திங்கள் நகா் பகுதிகளில் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்ய இருக்கிறாா். இதற்காக அவா் இரவு 7.30 மணிக்கு நெல்லையில் இருந்து காா் மூலம் தோவாளை வருகிறாா்.

             

mm

 

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக வடசோி அண்ணாசிலை பகுதியில் அதிமுக, பாஜக, தேமுதிகவினா் கொடிகளை கட்டியிருந்தனா். இதை பாா்த்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சினா் அந்த கொடிகளை மாற்ற வேண்டுமென்று காவல்துறையினாிடம் முறையிட்டனா். ஆனால் காவல்துறை அதை கண்டுக்கொள்ளவேயில்லை.

        

இதனால் ஆத்திரமடைந்த திமுக கூட்டணி கட்சியினா் வடசோியில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாஜக கூட்டணி கட்சியினரும் அந்த இடத்தில் திரண்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனா். உடனே போலிசாா் அவா்களை தடுக்க முயன்றனா்.

 

election

 

 

இந்த நிலையில் நாகா்கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டியிருந்த வசந்தகுமாரும் பொன். ராதாகிருஷ்ணனும் அங்கு வந்தனா். இதனால் மீண்டும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதை தொடா்ந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

           

 

பின்னா் எடப்பாடி பழனிச்சாமி வந்து சென்ற உடன் கொடிகளை அவிழ்த்து விடுவதாக அதிமுகவும் பாஜகவும் உறுதியளித்ததால் திமுக கூட்டணியினா் அதற்கு சம்மதித்து கலைந்து சென்றனா். இதனால் அங்கு கொஞ்ச நேரம் பதட்டமான சூழ்நிலை உருவானது.

 

 

சார்ந்த செய்திகள்