ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநெல்வேலியில் காவலர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து அதன் காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாடன் பிள்ளை தர்மம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், சரிவர பணிக்குச் செல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாண்டு ஏட்டு ரவிசந்திரன் பணத்தை இழந்ததால் விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த ரவிச்சந்திரனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.