திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் சிட்டி போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருச்சி மாநகர கமிஷனர் அருண் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சி மாநகர காவல்துறையில் சுமார் 1821 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். இரண்டாவது தவணை 66 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும் மீதமுள்ள 600 போலீஸார்களுக்கும் தற்போது தடுப்பூசி போடப்படவுள்ளது. போலீஸார் முன் களப்பணியாளர்கள் என்பதால் அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அதனால் அவர்களது குடும்பத்தினரை அழைத்துச் சென்று தடுப்பூசி போட நேரம் இல்லை என்பதால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.