Skip to main content

காவலருக்கு அரிவாள் வெட்டு; ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
police shot rowdy who tried to escape by slashing  police with a scythe

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த வாரம் ரவுடி இர்ஃபான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முத்தழகுபட்டியைச் சேர்ந்த ரிச்சர்ட் சர்ச்சின், எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நித்திஷ், பிரவீன் லாரன்ஸ் ஆகியோரை  போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்தநிலையில் படுகொலையின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் படுகொலை சம்பவத்தின் அவர்கள் அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்காக ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாதுகாப்புடன் திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி மயானப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரிச்சர்ட் சச்சின் காவலர் அருண் பிரசாத்தின் இடது கையில் வெட்டி விட்டுத் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது ஆய்வாளர் வெங்கடாசலபதி தனது கை  துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் முட்டிக்கு கீழே சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரிச்சர்ட் சச்சின் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருண் பிரசாத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்