நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்த கலைச்செல்வன் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆனந்த கலைச்செல்வன் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், காவலர் ஆனந்த கலைச்செல்வன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மாணவியின் ஆபாசப் படங்களை எடுத்து வைத்துகொண்டு மிரட்டி ஆனந்த கலைச்செல்வன் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் காவலர் ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
காவலர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.