Skip to main content

திருச்சியில் இளம்பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

police investigation started on  women and school girl missing issue in trichy 

 

திருச்சியில் இளம்பெண்கள் காணாமல் போனது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 20). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற தமிழ்ச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழ்ச்செல்வியை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் இது குறித்து பாரதிதாசன் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் இந்திரா தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது 18 வயது மகள் பொன்மலையில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடிவருகின்றனர். பள்ளி மாணவி ஒருவர் காணாமல் போனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்