விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் ஆயுத படையில் காவலராக இருந்தவர் கண்ணன். முதுகு தண்டுவட பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்த இவர், தாங்க முடியாத வலியின் காரணத்தினால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அரகண்டநல்லூரில் காவலராக பணி செய்த வீரப்பன் ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.
மேற்ப்படி இரு குடும்பத்தினரும் மிகுந்த சிரமத்தில் இருந்தனர். இதனையறிந்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அந்த குடும்பத்தினருக்கு உதவிட வேண்டும் என்றும், அது ஒரு கூட்டு முயர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார்.
அதன் காரணமாக - மாவட்ட அளவில் பணி செய்யும் உதவி ஆய்வாளர்கள் தங்களின் இந்த மாத சம்பளத்தில் 500 ரூபாயும், ஆய்வாளர்கள் அதற்கு மேல் பொருப்பில் உள்ள அதிகாரிகள் 1000 ரூபாயும் பிடித்தம் செய்து கொள்ளுமாறு (முழு சம்மதத்துடன்) சம்மதம் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் மொத்தம் ஏழு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட கண்ணன் - வீரப்பன் குடும்பத்தினரை அலுவலகத்திற்க்கு வரவழைத்த எஸ்.பி. ஜெயகுமார் உதவி தொகையை அந்த குடும்பத்தினரிடம் வழங்கினார். அதிகாரிகளுக்கு அந்த குடும்பத்தினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
காவல்துறையில் அதிகாரிகளாக உள்ளவர்கள் பெரும்பாலானாவர்கள் தங்கள் உண்டு தங்கள் பணி உண்டு என ஒருவரையறையை வகுத்து கொண்டு அதைத்தாண்டி வெளியே வரமாட்டார்கள். இதுபோன்ற மனிதாபிமான முறையில் செயல்படும் அதிகாரிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக ஜெயக்குமார் உள்ளார். இப்படி நிறைய பேர் உருவாக வேண்டும் என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்.