அரியலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மத்திய அரசு ஓ.என்.ஜி.சி திட்டம் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தக்கோரி அகில இந்தியமக்கள் சேவை பிரிவு விவசாய சங்க தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் நீர்வள ஆர்வலர் தியாகராஜன் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆண்டிமடம் துணை தாசில்தார் வேலுமணி யிடம் மனு கொடுத்தனர்.
கூட்டமாக சென்று மனு கொடுத்தபோது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக ஆண்டிமடம் வி.ஏ.ஒ புஷ்பலதா ஆண்டிமடம் போலீசிடம் ஓடிப்போய் புகார் கொடுக்க, உடனடியாக ராக்கெட்வேகத்தில் விவசாயிகள் மீது போலீஸ் வழக்கு போட்டுள்ளது. பொதுவாக கிராமத்தில ஒரு பழமொழி சொல்வாங்க ''எருமைமாடு போறது கண்ணுக்கு தெரியல ஆனால் ஈ போறது தெரிஞ்சிடிச்சு போல'' என்பார்கள் நாட்டில் எவ்வளவு பெரிய குற்றங்கள் தெரிந்தும், தெரியாமலும் நடக்கிறது, நடந்துள்ளது. அதிலே கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் ஏராளம் ஏராளம் அப்படி இருக்கும்போது விவசாயிகளும் பொதுமக்கள்தானே. அவர்களும் பொதுமக்கள் இல்லை என்றால் பொதுமக்கள் என்பவர்கள் யார் ? என்று கேட்கிறார்கள் தாலுக்கா அலுவலகம் வந்த பொதுமக்கள்.
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றுசட்டம் போட்டாலும் போடும் போல தமிழக அரசு.