
திருச்சி மாவட்டத்தில் நடமாடும் நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. இதில் நீதிபதியாக கோபாலகிருஷ்ணன் பணியாற்றிவருகிறார். நடமாடும் நீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராக திருச்சி அருகேயுள்ள நவலூர் குட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவர் பணியாற்றிவருகிறார்.
நடமாடும் நீதிமன்றம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் விசாரிக்கப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் ஆன்லைன் அபராத தொகை வரவு வைக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கடந்த நான்கு மாதங்களுக்கான ஆன்லைன் அபராத தொகை 40 ஆயிரத்தை, போலி ஆவணம் மற்றும் போலி முத்திரை பதித்து வங்கியில் அளித்து அத்தொகையை இளநிலை உதவியாளர் பிரபு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதி கோபாலகிருஷ்ணன் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து பிரபுவை கைதுசெய்தனர்.