Published on 30/07/2018 | Edited on 30/07/2018

தமிழக காவல்துறை சார்பில் மாநில அளவிலான 2018ம் ஆண்டிற்கான பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 22.07.2018 முதல் 28.07.2018 வரை சென்னை வண்டலூர் ஊனமாஞ்சேரியில் நடந்தது. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட மதுரை மாநகர C3-எஸ்.எஸ்.காலனி சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் சரவணகுமார், FINGER PRINT DEVELOPING போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். LIFTING, PACKING AND FORWARDING போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் சூரிய பிரபு POLICE PHOTOGRAPHY போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பெற்று வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற இருவருக்கும் இன்று மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.