காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்தில் காஷ்மீர் சிங்கம் ஃபரூக் அப்துல்லா & தோழிகளுடன். அவர் தனிமனிதர் அல்ல. காஷ்மீரின் வாழும் வரலாறு. இப்பொழுதும் மோடி அரசு அவரைக் கண்டு பயந்து வீட்டுக் காவலில் வைக்கிறது. காஷ்மீர் குறித்த பொய்களை பரப்புகிறது.
ஜம்மு& காஷ்மீர் மக்களின் மாநில உரிமைகளைப் பறித்துவிட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு 7 ஆண்டுகளில் ஒன்றும் செய்யாமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இவற்றை எதிர்த்து காஷ்மீர் மக்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தில் அவர் ஒலிப்பதை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. போராளிகளுக்கு ஓய்வில்லை!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவுடன் கனிமொழி, சுப்ரியா சூலே, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.