'இப்போகிரேடிக்' என்ற முறையில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என நேற்று வரை எந்த வித அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்று மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் தெரிவித்திருக்கிறார்.
முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது, ஜோதிஷ் குமாரவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சம்ஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழியை ஏற்றோம். நாங்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்கவில்லை. 2019- ஆம் ஆண்டு முதல் NMC அறிவுறுத்திய வழிகாட்டுதல் படியே அப்படி வாசித்தோம். நேற்று மதியம் தான் 'இப்போகிரேடிக்' முறையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்" என்றார்.
இதற்கிடையே, சமஸ்கிருத சர்ச்சை விவகாரம் தொடர்பாக, மாணவர் சங்கத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார்.