Published on 27/10/2019 | Edited on 27/10/2019
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்து வருகிறது.
![rescue](http://image.nakkheeran.in/cdn/farfuture/cvbGit5iYTmQFXiLwIfjs0EafsT1rF3rhVgAlEGQGwM/1572182739/sites/default/files/inline-images/zzzz11_1.jpg)
இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்திருந்தாலும் இறுதிக்கட்டமாக ரிக் இயந்திரத்தைக் கொண்டு 3 மீட்டர் இடைவெளியில் ஒரு மீட்டர் அகலத்தில் குழி தோண்டும் பணி கடந்த 10 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நிகழ்விடத்தில் மழை பொழிந்து வருவதால் மழைநீர் ஆழ்துளை கிணற்றுக்குள் நுழையாமல் இருக்க மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளது.
மழை பொழிந்து வந்தாலும் மீட்பு பணிகளுக்கான தொடர் முயற்சி சிறிதளவுகூட நிறுத்தப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.