திருவள்ளூர் மாவட்ட பி.ஆர்.ஓ., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருவள்ளூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி கலையரசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியான அஸ்வின் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என கலெக்டர் சுந்தரவள்ளி கண்டித்ததாக கூறப்படுகிறது. அஸ்வினை கண்டித்ததை எதிர்த்து கலெக்டரிடம் கலையரசன் வாதாடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கலெக்டர் பி.ஆர்.ஒ., கலையரசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.