Skip to main content

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

h

 

சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 94.86 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் ரூ. 88.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநிலங்களின் தேர்தலை முன்னிட்டு சில வாரங்களாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்துவந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களைப் போல இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வை கவனித்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்