Skip to main content

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
marina beach


 

 

சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் காந்திமதி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நினைவிடம் அமைந்தால் மெரினாவின் இயற்கை அழகு பாதிக்கப்படும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கறிஞர் காந்திமதி அந்த மனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சார்ந்த செய்திகள்