Skip to main content

பெரம்பூர் கோவில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு! - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

Perambur temple land reclamation case! - Government of Tamil Nadu ordered to respond

 

சென்னை பெரம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில்,  தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

‘சென்னை பெரம்பூரில், அனந்தீஸ்வரர் கோவில் மற்றும் பழனியாண்டவர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. அந்தக் கோவில்களுக்குச் சொந்தமாக, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலங்கள் உள்ளன. 

 

ஆனால், அந்த நிலங்களும், கோவில் குளமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்டு, முறையாக பராமரிக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர் கோ.தேவராஜன் என்பவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பல்வேறு மனுக்களைக் கொடுத்துள்ளார். ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

 

இந்த வழக்கு,  நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு, இந்துசமய அறநிலையத்துறை உள்ளிட்டோர்,  நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்