மதுரை கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறக்காததால் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துவந்த நிலையில், தற்போது மதுரை விரகனூர் சுற்றுவட்ட சாலையில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
1500 வருடம் பழமையான கிருதுமால் நதியின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், குப்பைகள் கொட்டப்பட்டதாலும் மாசடைந்து கிடக்கும் நதியை சீரமைத்து நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆதரவளித்து அந்த மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.