
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தூர்வருவது என்பது வெறும் கணக்கு எழுவதுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று பல்வேறு விவசாய சங்கள் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இந்த நிலையில் அரசாங்கத்தை நம்பி புண்ணியம் இல்லை நம்முடைய ஏரியை நாமே தூர்வாருவோம் என்று பொதுமக்களே தன் ஆர்வமாக தூர்வாரிய சம்பம் திருச்சி லால்குடியை அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் நடந்துள்ளது.

இது குறித்து அந்த பகுதி தன்னார்வலர்களிடம் நாம் பேசிய போது.. .லால்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் முக்கியமான பாச ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி 3 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியினால் 300 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த 3 வருடங்களாக ஏரி தூர்வாரப்படாதால் அந்த ஏரி முழுவதும் சீமவேலி வளர்ந்து காடுபோல் காட்சியளிக்க ஆரம்பித்தது. இந்த ஏரியில் குப்பைகள், பாட்டில்கள் பழைய துணிகள் கொட்டுவது மட்டும் அல்லாமல் ஏரியை கழிவரையாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஏரி முழுவதும் தூர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

இந்த ஏரியை தூர்வர சொல்லி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் வட்டாச்சியர் கடந்த 3 வருங்களாக தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நாங்கள் இனி பொறுத்துகொண்டு இருப்பதில் எந்த புண்ணியமும் இல்லை. கிராமத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மன்னர்மன்னன்,ராஜாரவி,வர்மா,குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் ராஜதுரை, கோபி, ஆகியோர் கொண்ட குழு இவர்களுடன் கிராமத்து இளைஞர் அடங்கிய குழு தாங்களாகவே சொந்த செலவில் பொக்லின் இயந்திரங்களை பயன்படுத்தி தூர்வார ஆரம்பித்தனர். இன்னும் ஒருவாரத்தில் இந்த தூர்வாரும் பணி நிறைவடையும் என்கிறார் அந்த ஏரியின் மீது நம்பிக்கை கொண்ட தன்னம்பிக்கை குழுவினர்.
பொதுமக்கள் தன்னார்வமாக ஏரியை தூர்வார ஆரம்பித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர்களின் அக்கரையின்மையை காட்டுகிறது. இப்போது இந்த தூர்வாரும் பணியின் மூலமாக அடுத்த வரும் பெரும் மழையினால் இந்த ஏரி நிரம்பி இதை நம்பியுள்ள பாசன விவசாயம் செய்ய முடியும். நீர்மட்டமும் உயரும் என்கிறார்கள் விவசாயிகள்.