Skip to main content

‘வறுமைகோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’-மார்க்சிஸ்ட் கட்சி மனு!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

‘People below the poverty line should be given a discount on jewelery’ - Marxist Party Petition

 

தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் கீழே உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள 35 கிலோ அரிசி வாங்கும் ஏழை மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தற்போது கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில்  35 கிலோ அரிசி வாங்கும் அனைத்து நபர்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து நகைக் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்குடி மத்திய கூட்டுறவு வங்கி செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தேன்மொழி தலைமையில் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம், சிங்காரவேலு, விமல கண்ணன், கிளை செயலாளர்கள் காளிதாஸ் தேசிங்கு உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்துள்ள ஏழைமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்