Skip to main content

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் கைது

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் கைது

உலகின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் அந்த அமைப்புக்கு உதவி செய்து வருவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சாகுல் அமீது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்