பார்த்தசாரதியின் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளது - சகாயம்
இது தொடர்பாக சகாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையில் தமக்கு உதவிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கிரானைட் முறைகேடு விசாரணையின் போது ஒளிப்பதிவு கருவிகளை இயக்கிய பார்த்தசாரதியின் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கிரானைட் வழக்கை விசாரிக்க உறுதுணையாக இருந்த சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு தர வேண்டும். நரபலி தொடர்பான தகவல்களை அளித்த சேவற்கொடியோன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடர்பாக கோப்புகள் ஆகஸ்ட் 31-ல் ஒப்படைக்கப்படும். பார்த்தசாரதி உயிரிழந்த விவகாரத்தில் மறுவிசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.