Skip to main content

கிளி ஜோசியர் கொலை- தலைமறைவானவரை பிடிக்க 2 தனிப்படை!!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

 Inquiry

 

 

கிளி ஜோசியர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூங்கா ஒன்றின் முன்பு கிளி ஜோசியம் பார்த்து வருபவர் ரமேஷ். இன்று மதியம் ரமேஷ் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சரமாறியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த நபர் ஒரு துண்டு பிரசுரங்களை வீசியெறிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

 

 Inquiry

 

இந்த சம்பவம் நடந்த பகுதிக்கு அருகேதான் வடக்கு காவல்நிலையம் உள்ளது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். ரமேஷ் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

கொலை செய்த நபர் வீசிய துண்டு பிரசுரங்களில், ரமேஷ் திருப்பூர் மங்களம் பாரதி புதூரைச் சேர்ந்தவன். இவன் கடந்த 14 வருடங்களாக பூங்காவுக்கு வெளியே அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் தீயசக்தி சாத்தானை வைத்து பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருபவன். இவனுக்கு பின்னால் சில அரசியவாதிகள், சில விஐபிக்கள், சில காவல் அதிகாரிகள், சில கம்பெனி முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த கொலையில் தலைமறைவான ரகு என்பவரை கைது செய்ய தற்போது இரண்டு தனிப்படை காரைக்கால் விரைந்தது.

சார்ந்த செய்திகள்