Skip to main content

பிரதமர் வராமல் இருக்கட்டும் ஆனால் தராமல் இருக்கக்கூடாது-பாரிவேந்தர்

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தர் பிரதமர் நேரில் வரவில்லை என்றால் பரவாயில்லை நிவாரண தொகையை தந்தால் போதும் என்றார். 

 

kaja

 

தஞ்சை பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரி வேந்தர் அங்குள்ள விவசாயிகளுக்கு ஆறுதல்கூறினார். மேலும் புயலால் வீழ்ந்துகிடக்கும் தென்னைமரங்களை அரைத்துபொடியாக்கி அதனை உரமாக பயன்படுத்த வழிவகை செய்ய 3 அரைவை இயந்திரங்களையும்,தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.

 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 

kaja

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய உதவிகளை செய்திட வேண்டும், இங்கு தென்னையை அடிப்படையாக வைத்து வாழ்ந்துவரும், கயிறு திரித்தல்,சிறை எடுத்தல் போன்ற தொழில் செய்யும் மக்களுக்கும் இரண்டு வருடத்திற்காவது மாதம் 10 ஆயிரம் ரூபாய் வாங்கினால்தான் மக்கள் பழைய நிலையை அடைய முடியும். புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. என்னை பொறுத்தவரை அவர் வரவில்லை என்றால் என்ன இங்கு நிவாரண உதவிதான் தேவை எனவே பிரதமர் வராமல் இருக்கலாம் ஆனால் தராமல் இருக்கக்கூடாது. 15000 கோடி நிவாரண நிதியாக கேட்டுள்ளது தமிழக அரசு அதில் 2000 கோடியை விரைவாக வழங்கிட மத்திய அரசு ஆவண செய்திட வேண்டும் எனக்கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டின் ஓடுகளை இறக்கிய விவசாயி...! கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

'நிவர்' புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தென்னை மரங்களில் மட்டைகள், தேங்காய்களை இறக்கி வருவதுடன் மா, பலா, தேக்கு போன்ற மரங்களில் கிளைகளையும் அகற்றி உள்ளனர். அதேபோல, கடைகள் ஓரங்களில் நின்ற மரங்களில் கிளைகளை அகற்றியுள்ளனர். 

கடை, வீடுகளின் கூரைகளைத் தார்ப்பாய்கள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய கஜா புயலில், லட்சக் கணக்கான வீடுகள், கோடிக் கணக்கான மரங்கள் சேதமடைந்தது. பல வீடுகளில் ஓடுகள் காணவில்லை. இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில், குமார் என்ற விவசாயி, தனது வீட்டின் மேல் போடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஓடுகளையும் கீழே இறக்கி வைத்துவிட்டார். 

இது குறித்து விவசாயி குமார் கூறும் போது, “கஜா புயலில் எங்கள் வீட்டின் ஓடுகள் முழுமையாகக் காற்றில் பறந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு, கடன் வாங்கி மீண்டும் ஓடுகளைப் போட்டோம். வீட்டை இழந்த எனக்கு அரசு வீடு கேட்டு, மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்க பயமாக உள்ளது. அதனால்தான் முன் எச்சரிக்கையாக, நண்பர்கள் துணையோடு ஓடுகளை இறக்கி வைத்துவிட்டேன். இனிமேலாவது எனக்கு அரசு வீடு கொடுத்தால் எதிர்வரும் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியுடன் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.

 

 

Next Story

காசி யாத்திரை சென்று சிக்கித் தவிக்கும் முதியவர்கள்... உதவிக் கரம் நீட்டிய பெரம்பலூர் எம்.பி...!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

பெரம்பலூர் பகுதியில் இருந்து 56 முதியவர்கள் காசிக்கு யாத்திரை சென்றுள்ளனர். ரயில் மூலமாக சென்ற நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களால் தமிழகம் திரும்ப முடியவில்லை.

 

Corona virus issue - Perambalur MP Help for Elderly people

 



இதுப்பற்றிய தகவல் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதி எம்.பியான பாரிவேந்தரிடம் 56 பேரின் உறவினர்கள் தெரிவித்து ஊர் திரும்ப உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். நிலைமையை அவர்களிடம் விவரித்த பாரிவேந்தர் அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே வசதி செய்து தர ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.

அதன்படி காசியில் உள்ள அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதோடு அவர்கள் தங்கியுள்ள காசி ஸ்ரீ குமாரசாமி மடத்தின் நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடத்துக்கான கட்டணத்தைத் தனது சொந்த நிதியில் இருந்து அனுப்பி வைப்பதாகவும், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களும் அவர்களை நாங்கள் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம், தேவையான உணவினை தருகிறோம் எனச் சொல்லியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு தங்கியுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த முதியவர்களின் பராமரிப்பு செலவுக்காக அந்த மட நிர்வாகத்துக்காக 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

அங்குள்ள பெரும்பாலானவர்கள்  முதியவர்கள், சர்கரை நோய் உள்ளவர்கள் என்பதால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் அதற்கான உடனடி ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது நிலையை விளக்கி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்கிறார்கள் பாரிவேந்தர் தரப்பில்.