திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கோட்டூர் கோமளாபேட்டை பகுதியை சேர்ந்த பச்சமுத்து - சந்திரா தம்பதிகளின் மகள் சரஸ்வதி (27). இவருக்கும் கோட்டூரில் லேத் வைத்துள்ள பிரதீப்க்கும் கடந்த 2015 ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் தொழிலை விரிவாக்கம் செய்ய பணம் வேண்டும் என்று சரஸ்வதியை அவரது அப்பா வீட்டுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார் பிரதீப்.
பல முறை இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தற்கொலைக்கு முயன்றார் காப்பாற்றி சிகிச்சைக்கு சேர்துள்ளோம் என்று. மன்னார்குடி அரசு மருத்துவமனைிலிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அதிகாலை உயிரிழந்தார்.
சந்திராவின் பெற்றோர் பச்சமுத்து தன் மகளை வரதட்சனை கேட்டு பிரதீப் குடும்பத்தினர் அடித்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்று புகார் கொடுத்தார்.
ஆனால் அதிகாலையில் இறந்த சரஸ்வதியின் பிரேதப் பரிசோதனைக்கு கோட்டூர் போலிசார் மாலை 6 மணி வரை தஞ்சை போகாததால் சரஸ்வதி உடல் பிரேதப்பரிசோதனை செய்ய முடியாமல் பெற்றோரும் உறவினர்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கு அருகே காத்திருக்கிறார்கள்.
சந்திராவின் சாவில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர். டி. ஒ. விசாரனையும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா விசாரனைக்கு பிறகாவது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற உறவினர்கள் முதலில் சந்திராவின் உடலை சீக்கிரமே ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்.
ஏழைகள் என்றால் போலிசார் தாமதிப்பது ஏனோ.?