Skip to main content

கர்னல் பென்னிகுவிக் கல்லரையை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஓ.பி.எஸ்சின் மகன்!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
ops son


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டியதின் மூலம் தேனி மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபும், திண்டுக்கல் என ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இப்படி ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்து கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கை அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடவுளாக நினைத்து அவரது பிறந்த நாள் அன்று லோயர் கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பொங்கள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அதுபோல் நகரம் முதல் பட்டிதொட்டி அங்கங்கே பென்னிகுவிக்கின் பெயரில் விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பென்னிகுவிக் பெயரில் பரிசுகளை கொடுத்து பாராட்டி வருவதும் வழக்கம். அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள நகரம் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள வியாபார ஸ்தலங்களிலும் தங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பென்னிகுவிக் பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்படி தங்கள் முன்னோர்களையும் தங்களையும் வாழவைத்த கர்னல் பென்னிகுவிக் மறைந்தாலும் கூட அவரை இன்று வரை தேனி உள்பட ஐந்து மாவட்ட மக்களும் தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

 

 

இப்படி மக்கள் மனதில் தெய்வமாக இருந்து வரும் பென்னிகுவிக்கின் கல்லறை லண்டனில் உள்ள சென்ஜோசப் தேவாலயத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சமீபத்தில் அரசியலில் குதித்த நமது துணை முதல்வர் ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத்துக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவியையும் ஒபிஎஸ் வழங்கினார். இதையடுத்து ரவீந்திரநாத் திடீரென மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் மனதில் தெய்வமாக இருக்க கூடிய பென்னிகுவிக்கின் கல்லறைக்கு போய் ஆசி வாங்குவற்காக லண்டன் சென்று அங்குள்ள செயின் ஜோசப் தேவாலயத்திற்கு சென்ற ரவீந்திரநாத்துக்கு அங்கு இருந்த பென்னிகுயிக்கின் உறவினர்களும் வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பின் அந்த தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருந்த பென்னிகுவிக்கின் கல்லறைக்கு சென்ற ரவீந்திரநாத் தான் அணிந்திருந்த சூவை கலட்டாமலையே பென்னிக்குக்கின் கல்லறை மேலையே நின்று பென்னிகுவிக்கு மரியாதை செலுத்துவது போல் மலர் கொத்துகளை வைத்து வணங்கினார். அதன் பின் தேவலாய நிர்வாகிகளுடன் கல்லறை அருகே நின்று புகைபடங்களையும் எடுத்து கொண்டார். இப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மூலம் அனுப்பியுள்ளார். இதை கண்ட தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். துணை முதல்வரான ஒபிஎஸ்சிடம் இருக்க கூடிய மரியாதையில் துளி அளவு கூட அவரது மகனுக்கு இல்லை இப்படியா பென்னிகுவிக்கின் கல்லறை மேல் நின்று போட்டாவுக்கு போஸ் கொடுத்து நாங்கள் குலதெய்வமாக வணங்க கூடிய கர்னல் பென்னிகுக்கயே அசிங்கப் படுத்தி இருக்கிறார் என்ற பேச்சு அங்கங்கே உள்ள மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

இதுபற்றி கம்பத்தை சேர்ந்த கர்னல் பென்னிகுவிக் அமைப்பை சேர்ந்த சிலரிடம் கேட்ட போது..
  ops son


கடந்த 2011ல் கேரளா அடாவடியை கண்டித்து முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக தேனி மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் கொதித்து எழுந்து ஒரு மாதம் போராட்டம் நடத்திய போது ஒபிஎஸ் கண்டு கொள்ளாமல் கடைசியில் கேரள குமுளியை மக்கள் முற்றுகையிட போகிறார்கள் என்ற விஷயம் தெரியவும் தான் ஒபிஎஸ் ஓடி வந்து பேச்சு வார்த்தை நபத்தினார். அதனால் டென்ஷனான மக்கள் ஒபிஎஸ் மேல் செருப்பை வீசினார்கள். அதிலிருந்தே ஒபிஎஸ் முல்லைபெரியாறு பிரச்சனையை கண்டு கொள்வதில்லை.

கர்னல் பென்னிகுவிக் சிலைக்கும் மாலை மரியாதை செய்யமாட்டார். இது அனைவருக்கும் தெரியும். அதுபோலதான் மரியாதையின்னா என்னனானு தெரியாமல் தற்பொழுது அரசியலில் உலாவிவரும் மகன் ரவீந்திரநாத் பென்னிகுயிக்கு மரியாதை செய்கிறேன் என்று அவர் கல்லறை மேல் நின்று பென்னிகுவிக்கயே அவமானப்படுத்தி விட்டார். இப்படி சின்ன பிள்ளை தனமாக இருக்க கூடிய ஒபிஎஸ் மகனை எல்லாம் எப்படி அரசியல் வாதினு ஏற்றுக்கொள்ள முடியும். அதிலையும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தனது மகனான ரவீந்திரநாத்தை தான் ஒபிஎஸ் தேர்தல் களத்தில் நிறுத்த போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இப்பவே பென்னிகுயிக் கல்லறை விஷயத்தில் மக்கள் மத்தியில் ஒரு கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டார் என்று கூறினார்கள். ஆக பென்னிகுயிக்கின் கல்லறை சர்ச்சை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்