குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட்டால் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்குவதையும் அடிமையாவதையும் தடுக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
செல்ஃபோனிலேயே குழந்தைகள் மூழ்கி கிடப்பதால் மாணவர்கள் மத்தியில் கோபமும் தற்கொலை மனநிலையும் உருவாகிறது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட்டால் மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாவதைத் தடுக்கலாம் என தெரிவித்திருக்கிறது.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகாமல் அரசு தடுக்க வேண்டும் என மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.