Published on 20/05/2019 | Edited on 20/05/2019
கடந்த ஏப்ரல் 18- ஆம் தேதி 17 வது மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. அப்போது கடலூர் மாவட்டம் திருவதிகையில் உள்ள 210-வது வாக்குச்சாவடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காசி தங்கவேல் பெயருக்கு நேரான இருக்க வேண்டியது பரிசுப்பெட்டி சின்னத்துக்கான பட்டன் இல்லாததை தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 657 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை 546 பேர் வாக்களித்தனர். இது 83 சதவீத வாக்கு பதிவாகும். மேலும் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 437 பேர் வாக்களித்துள்ளனர். இது 66 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
கடந்த முறையை விட 17 சதவீத பேர் குறைவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.