கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் காவல் நிலைய எல்லையிலுள்ள 32 ஊராட்சி மன்ற தலைவர்களுடன் இன்ஸ்பெக்டர் கவிதா, ஆடி திருவிழா தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வேப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆடி மாதத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பொதுமக்கள் பால்குடம் எடுப்பது, அலகு போடுவது, பொங்கல் வைப்பது என சிறு கோயில்களில் திருவிழா நடப்பது வழக்கம். அப்படி திருவிழா நடைபெறும் ஊராட்சியில் முன்னதாக காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும்.
திருவிழாவின்போது 25 நபர்களுக்கு மேல் கூட கூடாது, கோயிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஆடல், பாடல் நிகழ்ச்சி மற்றும் மேடை கச்சேரி நடத்தக்கூடாது, தெருக்கூத்து நடத்தக்கூடாது, என பல்வேறு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும், குறிப்பாக வெளியூர் நபர்கள் திருவிழாவை காண வரக்கூடாது என பல உத்தரவுகளை வழங்கினார்.
கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், மாளிகைமேடு செந்தில்குமார், திருப்பெயர் ரஞ்சிதம்ராமசாமி, நகர் சங்கர், சேப்பாக்கம் தெய்வானை தீனதயாளன், ஐவதகுடி முனியன் உள்ளிட்ட சுமார் 25 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.