தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா மாதகடப்பா கிராமம் உள்ளது. இதன் அருகேயுள்ளது ஆந்திரா மாநிலத்துக்கு உட்பட்ட தாண்டா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மோகன்நாயக். ஆந்திரா ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகராக உள்ளார்.
இவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், பலமாகவும் தாக்கி தொடர்ந்து வன்கொடுமை செய்தார் என்றும்.. என்னால் முடியவில்லை விட்டுவிடுங்கள் என்று கத்தியபோதும் விடவில்லை என பெண் ஒருவர் கதறி அழும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்படியாக நீளும் அந்த வீடியோவில் தமிழில் பேசும் பெண் தனது பெயர் ஊர் குறித்த எந்த ஒரு விவரங்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட மோகன் நாயக்கை ராமகுப்பம் காவல்நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதில் அந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது ராஜ்பேட்டை கூட்டுரோடு பகுதி. இங்குள்ள ஒரு தாபாவில் வைத்துதான் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என காவல்துறை கண்டறிந்துள்ளது. மோகன்நாயக் நான் மட்டும் செய்யவில்லை என்னோடு சேர்ந்து இன்னும் 3 பேர் அந்த பெண்ணுடன் இருந்தோம் எனச்சொல்ல அவர்களையும் விசாரணைக்கு அழைத்து சென்று விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்தது ஆந்திரா மாநிலம் குப்பம் தொகுதியில். குப்பம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பர் ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சந்திராபாபு நாயுடுவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதி மட்டுமல்லாமல் வாணியம்பாடி பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.