பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி முதல்வராக என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதில் வெளியப்படை தன்மையில்லை என அவரது நியமனத்தை எதிர்த்து பேராசிரியர் நந்தினி உட்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தினர்.
இந்தவழக்கில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் என்.சேட்டு நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம் கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தனிநீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார். மேலும் முதல்வர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து என்.சேட்டு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தனிநீதிபதியின் உத்தரவில் கல்லூரி முதல்வர் என்.சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம் கல்லூரி முதல்வர் தேர்வுவில் உள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.