தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. நிலத்தடி நீர் பயன்பாட்டை விவசாயிகள் குறைக்க முன்வர வேண்டும். இல்லையேல் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பறிபோய்விடும் பேராபத்து ஏற்படும்.
தமிழகத்தில் மின் கோபுரம் அமைக்க, இயற்கை வளங்கள் எடுக்க, சாலைகள் அமைக்க விளை நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் விவசாயிகளுக்கு விரோதமாக ஈடுபடும் அரசு மற்றும் அதற்கு மறைமுக துணைபோகும் அரசியல் இயக்கங்களை தேர்தல் களத்தில் விவசாயிகளை ஒன்றுப்படுத்தி அம்பலபடுத்த தயங்க மாட்டோம் என எச்சரிக்கிறோம்.
நெல் கொள்முதலில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. சாக்கு, பணத் தட்டுபாட்டால் கொள்முதல் செய்ய மறுப்பதால் பொங்கல் திருநாள் நேரத்தில் விவசாயிகள் நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
மேற்கண்டவாறு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இன்று (09.01.2019) நடைபெற்ற சமூக பண்பாட்டு விழா நிகழ்ச்சியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைவர் சைவராசு தலைமை வகித்தார், செயலாளர் சிவாஜி கணேசன் வரவேற்றார், பொருளாளர் நேரு நன்றி கூறினார்.
த கா.வி.ச.மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலாளர் மணி, தலைவர் பாஸ்கரன், கவுரவ தலைவர் திருப்பதிவான்டையா துணைதலைவர் வீரப்பன், அறிவு, மகேஷ்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.