Skip to main content

நிரம்பி வழியும் குளம்;கொட்டும் மீன்கள்!

Published on 17/08/2018 | Edited on 27/08/2018

தொடர் மழை காரணமாக கோவை முத்தண்ணன் குளம் நிரம்பி வழிவதுடன், குளத்தில் மீன்கள் அதிகளவு கிடப்பதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.  

 

fish

 

 

 

கோவை, ஆர்.எஸ்.புரம் அருகே 190 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது முத்தண்ணன் குளம். இந்தக் குளத்தை ஒட்டி, 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, பிளாஸ்டிக் கழிவுகளால், முத்தண்ணன் குளம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, அதன் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதற்கிடையே, கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளம் நிரம்பி வருகிறது. அதனால், குளங்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

 

 Powdered fish

 

 

 

இதனால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் தாங்களாகவே வந்து குளத்தில் இறங்கி மீன்களை பிடித்து அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர். சில நேரங்களில் மீன்களை வாடிக்கையாளர் கண்முன்னே பிடித்து விற்பனை செய்து வருவதும் நடந்து வருகிறது, மீன்கள் அதிகளவு கிடைப்பதால் ஒரு கிலோ மீன் ரூ. 10 குறைவாகவும் கிடைக்கிறது. மழையினால் நீரின் அளவு உயர்ந்துள்ளதுடன், மீன்களின் எண்ணிக்கையையும் அதிகமாகியுள்ளது. இருப்பினும், வியாபாரம் நோக்கில் சிறிய மீன்கள் பிடிப்பதால் மீன்களின் வளர்ச்சி தடைப்படும் அபாயம் உள்ளதால் அதற்கான நடவடிக்கையும் மாநகாராட்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.