Published on 19/06/2019 | Edited on 19/06/2019
.
புதுக்கோட்டையில் பள்ளிக்கூடங்களில் இறைவணக்க கூட்டத்தை திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தி உள்ளார்.

திங்கட்கிழமை தவிர பிற நாட்களில் இறைவணக்க கூட்டத்தை வகுப்பறையிலேயே நடத்த வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ள அவர் இறைவணக்க கூட்டத்தின் போது வெயிலில் மாணவர்கள் மயங்கி விடுவதாக புகார்கள் வந்ததை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.