Skip to main content

அடுத்த 6 மணி நேரத்தில் 'நிவர்' அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

hj


வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினர் மாநிலம் முழுவதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆறு மணி நேரத்தில் 'நிவர்' புயல் அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்