தேனியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார்.
அதன்பின் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, 'தேர்தலில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகத் தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் வரும் திங்கள் முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்கள் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது.
அதாவது ஒரு குடும்பத்திற்கு 40 கிராம் நகைகள் கடனில் வைத்திருப்பது மட்டுமே ஏற்புடையது. நகைக்கடன்களை பெறுவதற்கு கூட்டுறவுத்துறைத் தலைவர்கள் உள்ளிட்ட யாரேனும் பணம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலே நகைக்கடன்கள் தள்ளுபடி செய்தது தற்போதைய தமிழக அரசு தான் தற்போது பொட்டாஷ் உரங்கள் விலை யை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பொட்டாஷ் உரங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டு விலைக்கு என்றவாறே விற்பனை செய்ய வேண்டும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.