Skip to main content

பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைக்க கிரண்பேடி உத்தரவு!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கம் அருகே கடந்த வாரம் புதிதாக திறக்கப்பட்டது கடலூரின் புகழ்பெற்ற கே.வி டெக்ஸ்  துணிக்கடை. போக்குவரத்துக்கு இடையூறாக இக்கடை அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்த கிரண்பேடி  உரிய வர்த்தக உரிமம் பெறாதது, முழுமை பெறாத உள் கட்டமைப்பு பணிகள்,  வாகன நிறுத்துமிடம்,  நகரமைப்பு குழும அனுமதி இல்லாதது ஆகியவற்றால்  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கை நிறுவனத்தை மூடி சீல் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து  உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி கே.வி டெக்ஸ் கடைக்கு சீல் வைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தெரியாமல் பகிர்ந்த வீடியோ... ட்ரோலுக்கு உள்ளான கிரண் பேடி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

KIRAN BEDI

 

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநருமான கிரண்பேடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

 

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கடல் மீது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று துள்ளி எழுந்து வாயால் கவ்வி கடலுக்குள் இழுத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியை நேஷனல் ஜியோகிராபி சேனல் ஒரு மில்லியன் கொடுத்து பதிவு உரிமை பெற்றதாக பொய்யாக உலா வந்த செய்தியை கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 'வாட்ச் திஸ்' என்று கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரண் பேடிக்கு அது 2017 ஆம் ஆண்டு வெளியான '5 ஹெட்டெட் ஷார்க் அட்டாக்' என்ற திரைப்படத்தின் காட்சி என்பது தெரிந்திருக்கவில்லை. அத்திரைப்படத்தில் கடல் மேற்பரப்பில் பறக்கும் ஹெலிகாப்டரை  ராட்சத மீன் ஒன்று கடலுக்குள் இழுத்துச் செல்வதும், அதனை பார்த்து சுற்றுலா பயணிகள் பயப்படுவது போன்ற காட்சி அமைப்பு இடம்பெற்றிருந்தது.

 

KIRAN BEDI

 

இந்த காட்சியை உண்மையான காட்சி என கிரண்பேடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போலி செய்தியை கிரண்பேடி தெரியாமல் பகிர்ந்தது குறித்து டிவிட்டர் பயனர்கள் கிரண்பேடியை 'ட்ரோல்' செய்து வருகின்றனர். சில நிமிடங்களில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட கிரண்பேடி, 'இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எதற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது' என மழுப்பும் வகையில் பதிவிட்டார்.

 

அவர் டிவிட்டரில் இதுபோன்று போலியான தகவல்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பே 2019ஆம் ஆண்டு வயதான பெண்மணி நடனமாடும் வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அது '97 வயதில் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடியின் தாய்' என பதிவிட்டு இருந்தார். ஆனால் அது மோடியின் தாய் அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. பொய்யான செய்திகள் என வெளிப்படையாக கிரண்பேடியிடம் டிவிட்டர் பயனர்கள் சுட்டிக்காட்டினாலும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து எந்த ஒரு பதிவுகளையும் அவர் இதுவரை அகற்றவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

 

Next Story

நியமன எம்.எல்.ஏ.முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் ! - பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல் !

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

BJP appointed kiranbedi as Governor to create crisis in Congress

 

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து, ஆட்சியிலிருந்து அகற்றியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு சமமாகவே கருதுகிறேன். 

 

காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஒரே நோக்கில் கிரண்பேடியை துணைநிலை ஆளுநராக நியமித்த மத்திய பாஜக அரசு, அவர் மூலம் ஆட்சிக்குத் தொடர் தொல்லைக் கொடுத்து, செயல்பாட்டில் இருந்த திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தி, அத்தியாவசிய செலவினங்களுக்குக் கூட நிதி ஒதுக்காமல் வஞ்சித்தது. இவ்வளவு இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, முதல்வர் நாராயணசாமி தனது நிர்வாகத் திறமையால் மிகச்சிறப்பான நிர்வாகத்தைக் கொடுத்தார்.

 

கொல்லைப்புற அரசியலைத் தனது கொள்கையாகவும், குதிரை பேர அரசியலைத் தனது கோட்பாடாகவும் கொண்ட பாஜகவின் இந்தச் செயல், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களுக்கு வாக்களித்து தேர்வு செய்த வாக்காளர்களை முட்டாள்களாக்கும் செயலாகும். புதுச்சேரியில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கேலிக்கூத்துகள் நடக்காமல் தடுக்க, நியமன உறுப்பினர் என்ற முறையை ஒழித்துக்கட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிலைக்குழு அளித்தப் பரிந்துரையின் அடிப்படையில் முழு மாநில தகுதியைப் புதுச்சேரிக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் " என்று வலியுறுத்தியிருக்கிறார்.