Published on 05/07/2018 | Edited on 05/07/2018

முன்னாள் மத்திய அமைச்சரரான மு.க.அழகிரி திருமண விழா ஒன்றில் பேசும்பொழுது திமுகவில் தற்போது செயல்படாத தலைவர்கள்தான் உள்ளனர் என கூறியுள்ளார்.
மதுரை பாலமேட்டில் தனது ஆதரவாளர் மதுரை வீரன் திருமணத்திற்கு வந்த மு.க.அழகிரி பேசுகையில், திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் செயல்படாத தலைவர்களும் பொறுப்பாளர்களும்தான் உள்ளனர். நன்றாக செயல்படுபவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே செயல்வீரர்கள், எதற்கும் சோராதவர்கள் சோரம்போகாதவர்கள்...வரும் வழியெங்கும் தோரனைகளை பார்த்தேன்..மிக மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக தன் விசுவாசிகளின் நிகழ்ச்சிக்கு சென்று திமுக பற்றி விமர்சித்து பேசி வருவது கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.