கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் கேம்.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன்
என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியது மாவட்டம் மட்டும்மல்ல மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு போஸ்டரை எடப்பாடி ஆதரவாளரான கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் கோஷ்டியை சேர்ந்த பால்பாண்டியன் தான் ஒட்டினார் என்ற பேச்சு மாவட்ட அளவில் உள்ள கட்சி காரர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் கம்பம் வந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பியபோது... கடந்த இரண்டு வருடமாகவே அனைத்து அரசு விழாவிலும் கலந்து கொண்டு தான் வருகிறேன். சமீபத்தில் ஒரு விழாவுக்கு மட்டும் போக வில்லை. அதுவும் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் போக முடிய வில்லை. இங்குள்ள புதுப்பட்டியில் தங்கி கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நூறு தடவை போய் மக்கள் பணியாற்றி வருகிறேன்.
அரசியல் கட்சி என்று இருந்தால் அதில் உள்கட்சி பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அது காலப் போக்கில் சரியாகி விடும் என்று சொன்ன ஜக்கையனிடம் எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிய பால்பாண்டியன் உங்க ஆதவாளர் என்று சொல்கிறார்களே என்றதற்கு..அவர் என்னுடைய ஆதரவாளர் இல்லை ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருடன் இருந்த பால் பாண்டியன் தான் அப்படி செய்திருக்கிறாரே தவிர எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதுபோல் மாவட்டத்தில் எடப்பாடி அணி ஒபிஎஸ் அணி எல்லாம் இல்லை எல்லோரும் ஒரே அணியாக தான் செயல்பட்டு வருகிறோம் மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்சியாக இருந்தாலும் பெயர் போட்டு தகவலும் சொல்லி விடுவார்கள். நானும் ஓபிஎஸ் சுடன் இணைந்து தான் செயல்பட்டு வருகிறேன்.
அதுபோல் எடப்பாடியும் மிக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஓபிஎஸ்சும் கட்சியின் ஒருங்கிணைப்பையும் மிக சிறப்பாக செய்து வருகிறார் என்று கூறினார்.