துணை முதல்வரான ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குச்சனூர் சிலம்பு சனிஸ்வரன் கோவிலின் அருகே உள்ள தெற்கு பகுதியில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி திருக்கோயிலில் நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் சுவற்றில் வைக்கப்பட்ட கல் வெட்டில்தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒபி. ரவீந்திரநாத்குமார் ஒபிஜெயபிரதீப்குமார்" என்று கோல்டு கலரில் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழ் 16.5.2019 என தேதியும் போட்டபட்டிருத்தந்து. தேர்தல் முடிவுக்கு முன்னரே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
தீயாக பரவிய இந்த சர்ச்சையை அடுத்து நேற்று மதியம் அந்த கல்வெட்டை மறைக்க அதன்மேல் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படி ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது இன்றுதான் என் கவனத்திற்கு வந்தது என தெரிவித்த ரவீந்தரநாத் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னமனூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை கல்வெட்டு தொடர்பாக குச்சனூர் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான சின்னமனூர் ஓடப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.