Skip to main content

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல்!

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

 OPS caveat petition in the Supreme Court!

 

நடந்து முடிந்த அதிமுக பொழுதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஓபிஎஸ் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அவரது சார்பில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களைத் தவிர வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

இந்நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களைக் கேட்காமல் உத்தரவிடக்கூடாது என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்