ஓ.பி.எஸ். உடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இருந்த ஒ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்த பின்னர் முதல் முறையாக இந்த இரு அமைச்சர்களும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது. இரு அணியும் இணையும் சூழல் குறித்து இந்த சந்திப்பு என கூறப்படுகிறது. அணிகள் இணைவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் மாலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.