Skip to main content

‘வீடியோ காலில் வா...’ - ஓ.பி. ரவீந்திரநாத்தால் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்கள் குடும்பத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். ஓ.பி. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது. என் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்த நேரத்தில்தான் ரவி அண்ணாவின் ஃபோனில் இருந்து பேசிய ஒருவர், ஓபி. ரவீந்திரநாத் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என்றார். ஆனால், நான் அவரை அண்ணனாகவும், ஓபிஎஸ் அவர்களைத் தந்தையாகவும் பார்க்கிறேன். 
 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

இதையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தொலைப்பேசி எண்ணில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. நானும் ஃபோனை எடுத்துப் பேசினேன். நன்றாகப் பேசி வந்த அவர் ஒரு கட்டத்தில், என்னிடம் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி விட்டார். இதற்கு நான் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். நான் உடனடியாக ஃபோனை கட் செய்துவிட்டேன். ஆனால் ஆபாச வீடியோ காலில் வா.. என்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு பெண் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இதுபோல் ஃபோன் வந்தால் அவர்கள் விட்டு விடுவார்களா?

 

இது குறித்து ரவீந்திரநாத் மனைவியிடமும் சொல்லி இருந்தேன். மன்னிப்பு கேட்காவிட்டால் நான் மீடியாவிடம் செல்வேன் எனக் கூறிய நிலையில், எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஓ.பி.எஸ்ஸிடமும் சொல்லி இருந்தேன். ஓ.பி.எஸ்ஸிடம் பேசும்போது, நான் சொல்வதை கேட்கும் நிலையில் அவர் இல்லை, அம்மாவின் திதிக்கே ரவீந்திரநாத் வரவில்லை என்று கூறினார். அவரின் நண்பர் முருகன் என்பவரும் என்னை மிரட்டுகிறார். ஓ.பி. ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராகக் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்